Click Full Movie in Tamil Dubbed

Click Full Movie in Tamil Dubbed 


படத்தை பற்றிய சில தகவல்கள்

வெளியான தேதி : ஜூன் 22, 2006

இயங்குனர் : பிராங்க் கோரசி ( Frank Coraci )

பட்ஜெட் : தெரிவில்லை

பாக்ஸ் ஆபிஸ் : 24 அமெரிக்க டாலர்கள்


படத்தின் கதை

    படத்தில் வரும் ஹீரோவின் பெயர் மைக்கேல். அவர் இரண்டு குழந்தைகள், மனைவியுடன் வாழ்க்கையில் சந்தோசமாக வாழ்ந்துவருகிறார். மேலும் அவர் ஒரு பெரிய கம்பெனியில் சின்ன வேளையில் உள்ளார். இருந்தாலும் மைக்கேலின் சம்பளமும் சரி, மனநிம்மதியும் சரி அவருக்கு கிடைக்கவே இல்லை. தினமும் ஒரே மாதிரியான வேலை, குழந்தைகளை கூட சரியாக கவனிக்க முடியாமல் இயந்திரம் மாதிரி வீட்டிலும் வேலை பார்த்துக்கொண்டே இருப்பார். இப்படி கஷ்டப்பட்டு உழைத்தாலும் மைக்கேலுக்கு எந்தவித சம்பள உயரவும், பதவி உயர்வும் கிடைக்காது. அதனால் கடுப்பாகி தன் மனைவியிடம் சண்டை போடுவார். பிறகு ஒருநாள் டிவி ரிமோட் வாங்கலாம் என்று ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு போவார்.

அங்கே அவருக்கு வித்தியாசமான ஒரு ரிமோட் கிடைக்கும். அதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வருவார். ஆரம்பத்தில் அதை சாதாரணமான ஒரு ரிமோட் என்று தான் நினைத்துக்கொண்டிருப்பார். ஆனால் அந்த ரிமோட்டை வைத்து மனிதர்கள், நேரம் என எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியும். அதுமட்டுமில்லாமல் மைக்கேல் தேவையில்லாத நேரத்தையெல்லாம் அந்த ரிமோட்டை வைத்து Forward செய்துகொள்வார். இது நாளுக்கு நாள் அதிகமாகி நிறைய நாட்களை Forward செய்வார். பிறகு அந்த ரிமோட் மைக்கேல் ஆப்ரேட் செய்யாமலிலேயே நேரத்தை Forward செய்துகொண்டிருக்கும். இது கொஞ்ச காலத்தில் மைக்கேலை 60 வயதான தாத்தாவுக்கும் அளவிற்கு முன்னோக்கி கொண்டுபோகும். மைக்கேல் நிறைய நேரத்தை வீணாக்கியதால் மீண்டும் காலத்தை பின்னோக்கி செல்லலாம் என்று முயற்சி செய்யும்போது அது முடியாமல் போய்விடுகிறது.

   மேலும் தன் குடும்பத்துடன் வாழவேண்டிய அற்புதமான நாட்களையெல்லாம் அந்த ரிமோட் மூலம் Forward செய்திருப்பார். மைக்கேல் தனது வாழ்நாளையே இப்படி வீணாகிவிட்டோமே என்று வருத்தப்பட்டுக்கொன்றிருப்பார். அப்போதுதான் அந்த ரிமோட் மீண்டும் Forward செய்து மைக்கேலை சாகும் நாட்களுக்கு கொண்டுபோகும். தீடிரென ஒரு வெளிச்சம் வரும். அதன்பிறகு கண்விழித்து பார்த்தால் மைக்கேல் அந்த ரிமோட் வாங்குவவதற்கு முன் சூப்பர்மார்கெட்டில் இருந்த நாளுக்கு போவார். அந்த ரிமோட்டும் அவரிடம் இருக்காது. அங்கிருந்த வீட்டிற்கு சென்ற மைக்கேல் அடுத்த நாள் பார்க்கும்போது அந்த ரிமோட் ஒரு பார்சலாக அவருக்கும் வந்திருக்கும், அதை குப்பைத்தொட்டியில் தூக்கிபோட்டுவிட்டுஅவர் தனது வாழ்நாளில் உள்ள ஒவ்வொரு நாட்களையும் தனது குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்ந்தார்.

விளக்கம் : நேரத்தை சமூக வலைதங்களிலோ அல்லது ஆன்லைன் கேம் விளையாடுவதிலோ வீணாக்காமல், வாழும் நாட்களை குடும்பத்துடன் சந்தோசமாக வாழுங்கள்.

மேலும் இதுபோன்ற அல்லது வேறு ஏதேனும் ஆங்கில திரைப்படங்களின் கதையை தமிழ் மொழியில் தெரிந்துகொள்ள கீழே உள்ள Comment மூலம் பதிவு செய்யுங்கள்.
Click Full Movie in Tamil Dubbed Click Full Movie in Tamil Dubbed Reviewed by Hollywood Tamizhan on 4:56 AM Rating: 5

Post AD